விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் (10-8-2003)

விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் (10-8-2003)

ரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர். * 1809 - குவிட்டோ (தற்போதய ஈக்வடாரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் (10-8-2003)

ரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் தீவிரவாதிகள் ரிலெரீஸ் அரண்மனையை முற்றுகையிட்டு பதினாறாம் லூயி மன்னனைக் கைது செய்தனர்.

* 1809 - குவிட்டோ (தற்போதய ஈக்வடாரின் தலைநகர்) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

* 1821 - மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் மிசூரியின் தென்மேற்குப் பகுதியில் கூட்டணிப் படைகளை வென்றனர்.

* 1904 - ரஷ்யப் படைகளுக்கும் ஜப்பானியர்களுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்பெற்றது.

* 1913 - பால்கான் போர்கள்: பல்கேரியா, ருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

* 1944 - இரண்டாம் உலகப்போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்டிருந்த கடைசி ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

* 1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.

* 2000 - உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டியது

* 2006 - திருகோணமலையில் சேருவிலப் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.