சிங்கப்பூரில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள் செயல் கட்சி

சிங்கப்பூரில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள் செயல் கட்சி

சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி (மசெக) கைப்பற்றியது.

மக்கள் செயல் கட்சி இம்முறை மொத்தம் 61.24% வாக்கு விகிதத்தைப் பெற்றது.

இந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியை அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு மக்களிடம் நன்றி கூறினார் பிரதமர் லீ சியன் லூங்,

பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் இன்று அதிகாலை பேசிய திரு லீ இதனைத் தெரிவித்தார்.

வாக்கு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் மக்கள் செயல் கட்சிக்கு இன்னும் பரவலான ஆதரவு உள்ளதைத் தேர்தல் முடிவு காட்டுகிறது என்றார்.

இந்த வெற்றியைப் பொறுப்புடன் பயன்படுத்தப் போவதாகக் கூறிய திரு லீ, தற்போதைய நெருக்கடியிலிருந்து சிங்கப்பூரை மீட்க பாடுபடப்போவதாகக் கூறினார்.

"இந்த நெருக்கடி காலத்தில் மக்கள் எதிர்நோக்கிய வலியையும் பதற்றத்தையும் இந்த முடிவு காட்டுகிறது," என்றார் அவர்.

மேலும் பாட்டாளிக் கட்சித் தலைவர் திரு பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ எதிர்கட்சித் தலைவர் ஆவார் என்றும் அவர் கூறினார்.

தாம் பாட்டாளி கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கை அழைத்து பாட்டாளிக் கட்சியின் திறமையான செயல்பாட்டுக்காக வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார் திரு லீ.

இதேவேளை சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சியே ஆட்சியில் இருக்கின்றது.

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது

சிங்கப்பூர் நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இந்த கட்சியே அந்நாட்டில் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்து வரலாற்று சாதனை படை்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.