தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு வழங்கப்பட்ட தண்டனை

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு வழங்கப்பட்ட தண்டனை

கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்திஸ் ஆகிய மூவருக்கே இவ்வாறு போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த மூவருக்கும் தலா 10 மில்லியன் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மூவருக்கும் 1 வருட காலம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் 6 மாத காலம் உள்நாட்டு போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 1 வருடம் காலம் ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுத் தொடரின் போது உயிர்க் குமிழி முறையை மீறி கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இரவு இவர்கள் மூவரும் டரம் பிரதேசத்தில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வீடியோ ஆதாரமும் வௌியிடப்பட்டிருந்தது.

குற்றம் சுமத்தப்பட்ட குறித்த வீரர்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடாத்துவதற்காக 5 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.