ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாம் பிரேதபரிசோதனை பேராதனை போதனா வைத்தியசாலையில்!

ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாம் பிரேதபரிசோதனை பேராதனை போதனா வைத்தியசாலையில்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிவந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினியின் சரீரம் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளது.

குறித்த சரீரத்தை தனிமைப்படுத்தல் நெறிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுத்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், இன்று கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுப்பதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற விடயத்தை காவல்துறையினர் இன்று நுவரெலியா நீதிவானுக்குத் தெரியப்படுத்தினர்.

அத்துடன் நுவரெலியா நீதிவானின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரியப்படுத்தப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த நீதிவான் லக்சிகா குமாரி ஜயரத்ன, விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் நாளை காலை 8.30 அளவில் ஹிசாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் காவல்துறைப் பாதுகாப்புடன் சரீரத்தை பேராதனை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கட்டளை பிறப்பித்தார்.