அந்தரங்க படங்களை வைத்து பணம் பார்க்க முயன்ற யாழ். இளைஞர்! – பொலிஸிடம் சிக்கிய நண்பர்கள்!!

அந்தரங்க படங்களை வைத்து பணம் பார்க்க முயன்ற யாழ். இளைஞர்! – பொலிஸிடம் சிக்கிய நண்பர்கள்!!

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடாதிருக்க பெண்ணொருவரிடம் 14 லட்சம் ரூபா கப்பம் கோரிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.

அவர் சார்பாகப் பணம் பெற வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் பேஸ்புக் மூலம் கொழும்பு, வெள்ளவத்தையில் உள்ள பெண் ஒருவருக்கு காதல் வலை வீசியிருக்கிறார்.

33 வயதான அந்தப் பெண்ணும் அவரது காதல் வலையில் சிக்க, இருவரும் காதல் செய்திருக்கின்றனர். இது தொடர தனது ஏடாகூடமான அந்தரங்கப் படங்களை அந்தப் பெண் இளைஞருடன் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்தப் புகைப்படங்களை பகிரங்கப்படுத்தாது இருக்கத் தனக்கு 14 லட்சம் ரூபா தர வேண்டும் என்று அந்த இளைஞர் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அதையடுத்து அந்தப் பெண் பொலிஸாரின் உதவியை நாடியிருக்கிறார். கப்பப் பணத்தை வழங்குவதாகக் கூற, இளைஞர் தனது சார்பில் இருவரைப் பெண்ணிடம் அனுப்பியிருக்கிறார். பணத்தை வாங்க வந்த இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், கொழும்பு கொம்பனித் தெருவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.