ஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்! விடுக்கப்பட்டது கடுமையான எச்சரிக்கை

ஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்! விடுக்கப்பட்டது கடுமையான எச்சரிக்கை

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இனி யாருக்காவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தொடர்பிலிருந்த பிரதேசங்கள் மீண்டும் முடக்கப்படும். அது சில நேரம் நாடு முழுவதுக்குமான முடக்கலாக இருக்கலாம்.

இவ்வாறு கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத்தளபதியுமான சவேந்திர சில்வா கடுமையாக எச்சரித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையம், வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் என 340 பேருக்கு கொரோனா தொறறு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

வெலிசறை கடற்படை முகாமில்ஏற்பட்ட தொற்று போன்று கந்தக்காடு தொற்றை கூற முடியாது. எனினும் இது இரண்டை விட கந்தக்காட்டில் பணிபுரிபவர்கள் வீடுகளுக்குச் சென்றால் அப்போது அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டால் தான் நிலைமை மோசமாகும்.

அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்ற சங்கிலியுடன் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அப்பிரதேசங்கள் முடக்கப்படும். என எச்சரித்துள்ளார்.