அட.. இப்படியெல்லாம் கூட தண்டனை கொடுப்பாங்களா?

அட.. இப்படியெல்லாம் கூட தண்டனை கொடுப்பாங்களா?

உலகின் விசித்திரமாக வழங்கப்பட்ட தண்டனைகளின் பட்டியலை இங்கே காணலாம். இப்படியெல்லாம் கூட உங்களுக்கு தண்டனை கொடுப்பார்களா? என உங்களை யோசிக்க வைக்கும் பட்டியல் இது.

தண்டனைகள்

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குற்றங்கள் நடக்காமல் இருக்க சட்டங்களை இயற்றி வைத்துள்ளனர். அந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு தண்டனைகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறு தண்டனைகளை வழங்கினால் மீண்டும் அவர்கள் சட்டத்தை மீற மாட்டார்கள் என்ற கருத்தில் இந்த தண்டனை சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

​குற்றங்கள்

 

இந்த தண்டனைகள் பெரும்பாலும் ஜெயலில் அடைப்பதாக தான் இருக்கும். குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப காலம் மாறும். இந்தியாவில் உச்ச பட்ச தண்டனை தூக்கில் போடுவது தான். ஆனால் குற்றவாளிகளுக்கு ஜெயலில் போடுவது இல்லாமல் வித்தியாசமான தண்டனைகள் கொடுத்தால் எப்படி இருக்கும் அப்படி பட்ட தண்டனைகளைபற்றி தான் இங்கு காணப்போகிறோம்.

​சொந்த காலில் நிற்கும் தண்டனை

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவன் தன் பெற்றோர்கள் மீதே வழக்கு தொடர்ந்திருந்தான். அவர்கள் சொன்ன குற்றமாக அவர் குறிப்பிட்டிருந்தது பெற்றோர்கள் தனக்கு பாக்கெட் மணி தரவில்லை என்பது தான். இதை விசாரித்த நீதிபதி கடுப்பாகி அந்த 25 வது இளைஞனுக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. என்ன தண்டனை தெரியுமா அடுத்த 30 நாட்களுக்குள் அந்த இளைஞன் தன் பெற்றோரை விட்டு பிரிந்து தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது தான் அந்த தண்டனை

​சிறுவர்களுக்கு ஜெயில்

கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாள் 2 சிறுவர்கள் ஒரு சர்ச்சில் ஏசுநாதரின் சிலையை சேதப்படுத்திவிட்டனர். இந்த வழக்கில் இரு சிறுவர்களுக்கும் 45 நாட்கள் ஜெயின் தண்டனை வழங்கப்பட்டது. இதுமட்டுமல்ல இவர்கள் திரும்ப சொந்த ஊருக்கு செல்லும் போது கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக கூட்டி செல்லவும் உத்தரவிடப்பட்டது.

​பாட்டு கேட்கும் தண்டனை

 

 

2008ம் ஆண்டு இங்கிலாந்தில் அண்ட்ரூ விக்டர் என்பவருக்கு அந்நாட்டு நீதிபதி 120 பவுண்ட்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டார். எதற்காக தெரியுமா காரில் அதிக சத்தத்துடன் ரேப் பாடல் கேட்டதற்காக தான் இந்த தண்டனை. அண்ட்ரூ தன் தண்டனையை குறைக்கும்படி கேட்டதால் நீதிபதி 30 பவுண்ட் அபராதமும் 20 மணி நேரம் பீத்தோவனின் கிளாசிக்கல் மியூசிக் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்

​சர்ச்சில் ஊழியம் செய்யும் தண்டனை

2011ம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் டெய்லர் என்ற 17 வயது சிறுவனும் அவரது நண்பனும் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கினர். இதில் டெய்லரின் நண்பன் இறந்துவிட்டான். காரை டெய்லர் தான் ஓட்டியுள்ளான். அப்பொழுது அவனுக்கு கார் ஓட்ட லைசென்ஸ் கிடையாது அதே நேரத்தில் ஜெயிலுக்கும் இந்த வயதில் செல்ல முடியாது என்பதால் கோர்ட் அந்த சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சர்ச்சில் ஊழியம் செய்ய வேண்டும் என்றும் 18 வயதாகும் வரை ஆல்கஹால், டிரக்ஸ், நிக்கோடின் டெஸ்ட் எடுத்துக்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டது.

​கார்ட்டூர் பார்க்கும் தண்டனை

அமெரிக்காவின் மிஸ்ஸோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் பெர்ரி, இவர் மான் வேட்டையில் ஈடுபட்டு போலீசில் சிக்கில் கடந்த 2018ம் ஆண்டு தண்டனை பெற்றார். அப்பொழுது அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையுடன் சிறையில் மாதம் ஒரு முறையாவது டிஸ்னி கார்டூன் பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது.