செர்ரி ஏ: இன்டர் மிலான்- வெரோனா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

செர்ரி ஏ: இன்டர் மிலான்- வெரோனா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

செர்ரி ஏ கால்பந்து லீக் கால்பந்து தொடரின், இன்டர் மிலான் மற்றும் வெரோனா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

மார்க் அன்டோனியோ பெண்டேகோடி விளையாட்டரங்கில், உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில், இரண்டாவது நிமிடத்தில் வெரோனா அணியின் வீரரான டார்கோ லாஸோவிச் முதல் கோலை அடித்தார்.

இதனையடுத்து, போட்டியின் 49ஆவது நிமிடத்தில் இன்டர் மிலான் அணியின் வீரரான அன்டானியோ கன்ட்ரெவா, அணிக்காக முதலாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து, போட்டியின் 55ஆவது நிமிடத்தில் வெரோனா அணியின் வீரரான பெட்ரிகோ டிமார்கோ, இன்டர் மிலான் அணிக்கு ஓன் கோலொன்றை அடித்துக் கொடுத்தார்.

இதன்பிறகு, போட்டியின் 86ஆவது நிமிடத்தில் வெரோனா அணியின் வீரரான மிகுவில் வெலோசோ அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.

மேற்கொண்டு இரு அணிகளால் முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

செர்ரி ஏ கால்பந்து லீக் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, இன்டர் மிலான் அணி 65 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. வெரோனா அணி 43 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது