அதிக வேகத்திலான சூரியப் புயல் ஒன்று பூமியை நெருங்குவதாக நாசா தெரிவிப்பு

அதிக வேகத்திலான சூரியப் புயல் ஒன்று பூமியை நெருங்குவதாக நாசா தெரிவிப்பு

அதிக வேகத்திலான சூரியப் புயல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசாவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சூரியப் புயலானது மணிக்கு 16 இலட்சம் கிலோமீற்றர் வேகத்தில் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சார விநியோக கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பாடல் கட்டமைப்பு என்பன பாதிக்கப்படக்கூடும் என சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி இந்த அதிவேக சூரியப் புயல் முதன் முறையாக கண்டறியப்பட்டதுடன், இது வினாடிக்கு 500 கிலோமீற்றர் வேகத்தில் நகர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.