இங்லீஷ் பிரீமியர்: மன்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பான வெற்றி!

இங்லீஷ் பிரீமியர்: மன்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பான வெற்றி!

இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், அஸ்டன் வில்லா அணிக்கெதிரான போட்டியில், மன்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

வில்லா பார்க் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மன்செஸ்டர் யுனைடெட் அணியின் வீரரான புருனோ பெர்னான்டஸ் 27ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பொன்றை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார்.

இதனைத் தொடந்து அணியின் சகவீரரான மெசோன் கிறின்வுட் 50ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்துக் கொடுத்தார்.

இதன்பிறகு மன்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரரான போல் போக்பா, 58ஆவது நிமிடத்தில் அணிக்காக மூன்றாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் மன்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.