ம.பி சூரிய மின் திட்டம் இன்று முதல் பாவனைக்கு!

ம.பி சூரிய மின் திட்டம் இன்று முதல் பாவனைக்கு!

மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிற்கு அர்பணிக்கவுள்ளார்.

மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் மத்திய அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 175 ஜிகா வாட் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்  மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.