வடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்

வடக்கு- கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்- இராதாகிருஷ்ணன்

வடக்கு மற்றும் கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா- தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்ட த்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும்  நாடாளுமன்றத் தேர்தலில் எழுச்சி பெறவேண்டும்.

அனைத்து மக்களும், சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு முன்னர் எமது பகுதிகளில் செய்த அபிவிருத்தி செயற்பாடுகளை எம்மால் தொடர முடியும்.

இதேவேளை தற்போதைய ஆட்சியில் பொருட்களின் விலைகள்கூட குறைக்கப்படவில்லை.

இந்த ஆட்சியில் பல துன்பங்களை மாத்திரமே மக்கள் எதிர்கொள்கின்றனர்.

மேலும் சிறுபான்மையின பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவையே இயங்குகின்றது. இந்நிலைமையை நீடிக்கவிட கூடாது.

மேலும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும்.

ஆகவே எமது இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் தக்கவைத்துக்கொள்ளும்  வகையில் வாக்களிக்கவேண்டும்.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள கூடியதாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.