நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்

நேற்று அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்

நாட்டில் நேற்று (03) கொவிட்-19 தொற்றுறுதியான ஆயிரத்து 262 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 247 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதில் கட்டுநாயக்க பகுதியில் 68 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 224 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

கொழும்பு மாவட்டத்தில் 98 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 105 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பில் 41 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 32 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில 29 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 76 பேருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில 87 பேருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் 46 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 51 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 19 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.