ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமா? கைகளில் பணப்புழக்கம் முக்கியமா? மக்கள் தீர்ப்பிற்கு

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமா? கைகளில் பணப்புழக்கம் முக்கியமா? மக்கள் தீர்ப்பிற்கு

ஒரே கட்சியை சேர்ந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவு செய்வதா? அல்லது தமது கைகளில் பணம் புழக்கத்தில் இருப்பது முக்கியமான விடயமா என்பதை மக்கள் தீர்மானிகக் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மகரகமை தொகுதி அதிகாரச் சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்ற போது, எமக்கு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இருக்கவில்லை. எனினும் பெப்ரவரி மாத இறுதிக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்தோம்.

இதன் பிரதிபலனாக நாட்டின் அனைத்து இடங்களிலும் வியாபாரங்கள் அதிகரித்தன. இதனடிப்படையில் ஒன்றில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவினங்களை குறைக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் எப்போதும் செலவுகளை குறைத்து, கையில் பணத்தை சேமிப்பில் இருக்கவே முயற்சிக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.