ஏப்ரல் மாதம் முதல் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 10,500க்கும் அதிகமானோருக்கு கொரோனா

ஏப்ரல் மாதம் முதல் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 10,500க்கும் அதிகமானோருக்கு கொரோனா

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 10,500க்கும் மேற்பட்ட கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் 2,607 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,044 பேர் பேரும், அம்பாறை மாவட்டத்தில் 1,314 தொற்றாளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன கல்முனை பிராந்தியத்தின் 400 பேரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, அந்தக்காலப்பகுதியில் கொவிட்-19 தொற்றால் 167 பேர் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.