கொரோனா தொற்று - உலகம் முழுவதும் 33 லட்சம் மக்கள் மீண்டனர்

கொரோனா தொற்று - உலகம் முழுவதும் 33 லட்சம் மக்கள் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதனால் பெரும்பாலான நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில் நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டுள்ளதுடன், சில நாடுகளில் தடுப்பு மருந்து மனிதர்களிடத்தில் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், இதுவரையில் கொரோனாவிற்கான உரிய தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை. தறபோது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,791,307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,304,798 ஆக உயரந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53,503 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 396,275 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.