கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 177,711 ஆக அதிகரிப்பு

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 177,711 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் 2,850 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் உள்நாட்டில் 2,845 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் கொவிட் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 177,711 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் தொற்றிலிருந்து நேற்று மேலும் 2,573 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 146,362 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியான 29,986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை புத்தாண்டு  கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ கடந்து 80,610 ஆக பதிவாகியுள்ளது.