'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்

'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த சர்வதேச கிரிக்கட் பேரவையின், இருபதுக்கு இருபது 'உலக கிண்ண 2020' போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச கிரிக்கட் சபை அதிகாரிகள் கூடும் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என 'டெயிலி ரெலிகிராப்' செய்தி வெளியிட்டுள்ளது.
 

இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளை இந்த வருடத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு' கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

 

எப்படியிருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாரிய அளவில் பரவி வருவதன் காரணமாக பலகோடி டொலர் பெறுமதியான லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது ஏற்புடையது இல்லை என பிரபல விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.