கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம்: மெக்ஸிகோ

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம்: மெக்ஸிகோ

கொரோனா வைரஸ் (கொவிட்-19) இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம் என மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில், மெக்ஸிகோ பிரான்ஸை பின்தள்ளி, அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்ட ஐந்தாவது நாடாக மாறியுள்ளது.

இந்தநிலையில், ‘ஸ்பெயின் மற்றும் பிரான்ஸின் மக்கள் தொகை மெக்சிகோவை விட சிறியது என்னும், நம் நாட்டில் இறந்த ஒவ்வொருவருக்கும், மூன்று பேர் ஸ்பெயினில் இறந்துவிட்டார்கள். கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவில் உள்ள நாடுகளுடன் ஒப்பிட முடியாது’ என மெக்ஸிகன் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மெக்ஸிகோவில் 30,639பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 29,896 பேரும், ஸ்பெயினில் 28,385 பேரும் உயிரிழந்துள்ளனர்.