செர்ரி ஏ: ரோமா அணிக்கெதிரான போட்டியில் நபோலி அணி வெற்றி!

செர்ரி ஏ: ரோமா அணிக்கெதிரான போட்டியில் நபோலி அணி வெற்றி!

செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரின், ரோமா அணிக்கெதிரான போட்டியில் நபோலி அணி வெற்றிபெற்றுள்ளது.

சேன் போலோ விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 55ஆவது நிமிடத்தில் நபோலி அணியின் வீரரான ஜோஸ் கால்ஜோன் அணிக்காக முதல் கோலை அடித்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டியின் 60ஆவது நிமிடத்தில், ரோமா அணியின் வீரரான ஹென்ரிக் 60ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதன்பிறகு போட்டியின் 82ஆவது நிமிடத்தில் நபோலி அணியின் வீரரான லோரென்சோ இன்சைன் அணிக்கு வெற்றி கோலை அடித்துக் கொடுத்தார்.

செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை நபோலி அணி 48 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. ரோமா அணி 48 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.