மன்னார் தேவாலயங்களுக்குள் நுழைந்த மர்ம நபர் தொடர்பில் யாழ்.பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள தகவல்!

மன்னார் தேவாலயங்களுக்குள் நுழைந்த மர்ம நபர் தொடர்பில் யாழ்.பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள தகவல்!

நேற்றைய தினம் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயத்திற்கு மர்ம நபர் ஒருவர் பை ஒன்றை அணிந்து சென்றிருந்ததோடு மன்னாரில் உள்ள அனைத்துத் தேவாலயங்களுக்கும் குறித்த நபர் சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மன்னாரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் யாழ்ப்பாணம் பெரியகோவில் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலையை சொந்த இடமாக கொண்ட அலோசியஸ் ஸரீபன்பாஸ் (40வயது) என்பவரையே யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

குறித்த நபர் தான், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் நேற்றைய தினம் நண்டு கொடுப்பதற்காகவே பேசாலைக்கு சென்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.