கேரளாவில் முழு நேர ஊரடங்கு அமுல்!

கேரளாவில் முழு நேர ஊரடங்கு அமுல்!

கேரளாவின் திருவனந்தபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருவனந்தபுரம் மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் முழு நேர ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக முதலமைச்சரின் குடியிருப்பிலேயே அவரது அலுவலகம் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரச பேருந்துகள் ஆகியவை இயங்காது என்பதுடன், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.