இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பரிந்துரை

இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பரிந்துரை

இந்தியாவில் கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொவிட்-19 பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயர்மட்டக் குழுவிற்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கொவிட்-19 பரவல் அதிகரித்துவரும் 150 மாவட்டங்களில் சிலர் தளர்வுகளை மாத்திரம் அறிவித்து முழு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துவதற்கான பரிந்துரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பரிந்துரை தற்போது இந்திய மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்திய மத்திய அரசாங்கம், சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது