அடையாளமே தெரியாத சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: வைரலாகும் புகைப்படங்கள்

அடையாளமே தெரியாத சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவி பல திறமையாளர்களை அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அந்த பட்டியலில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் பெற்ற செந்திலும் அவரது மனைவி ராஜலட்சுமியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மட்டுமின்றி பல நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார்கள். தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவர்களுடைய கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது எளிமையான கிராமத்து பாணி உடை மற்றும் மிதமான மேக்கப் மட்டுமே போட்டு கலந்து கொள்வது வழக்கம்

ஆனால் தற்போது அவர் பதிவு செய்த புகைப்படங்களில் அவரது அட்டகாசமான மேக்கப் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தனக்கு மேக்கப் போட்டுவிட்ட மேக்கப் கலைஞருக்கும் தன்னை அழகாக புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கும் ராஜலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது