கொழும்பு துறைமுகம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மூன்றாம் நாள் விசாரணை

கொழும்பு துறைமுகம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மூன்றாம் நாள் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான 3ஆம் நாள் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய தினம் இடையீட்டு மனுக்கள் மீதான ஆராய்வுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை, சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், நேற்றும் இடம்பெற்றன.

இதன்போது மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன