ஈரானை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 163 பேர் உயிரிழப்பு

ஈரானை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 163 பேர் உயிரிழப்பு

ஈரானில் ஒரே நாளில் அதிக அளவாக 163 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. ஈரானை உலுக்கும் கொரோனா - ஒரே நாளில் 163 பேர் உயிரிழப்பு பலியானோரை தூக்கிச்செல்லும் ஊழியர்கள் டெஹ்ரான்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஈரானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஈரானில் ஒரே நாளில் அதிக அளவாக 163 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,438 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் அதிக அளவாக 163 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஈரான் 11-வது இடத்தில் உள்ளது.