தடை காலத்தை பயன்படுத்தி தாஜ்மகால் பராமரிப்பு பணி - தொல்பொருள் ஆய்வுத்துறை நடவடிக்கை

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் வரும் நினைவுச்சின்னங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் வரும் நினைவுச்சின்னங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 


இந்த தளங்கள் அனைத்தும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி வரை மூடப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

இந்தநிலையில் மேற்படி தடை காலத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி போன்ற நினைவுச்சின்னங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

தாஜ்மகாலை பொறுத்தவரை பிரதான குவிமாடத்தில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை அகற்றுதல், பிரதான வாயிலில் பதிக்கப்பட்டுள்ள பழைய கற்களை அகற்றி புதிய கற்களை பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதனால் தாஜ்மகால் புதுப்பொலிவுடன் மாறும் என தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைப்போல ஆக்ரா கோட்டையின் அமர்சிங் வாயில் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதேபூர் சிக்ரியில் தோடர்மால் பரடாரி, முகலாயர் கால வளாகங்கள் அனைத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறினர்.