அமெரிக்காவில் 13 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் 13 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவனை அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த காணொளியை இரு வாரங்கள் கழித்து சிகாகோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த காணொளியில் காரில் இருந்து இறங்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் எடம் டோலெடோ (Adam Toledo) என்ற சிறுவனை கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஆயுதமொன்றை வைத்திருந்ததாகவும், காவல்துறையினர் துரத்தும் போது தப்பி ஓடியுள்ளதாகவும் சிகாகோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கியை மீட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுவன் சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தன்வசமிருந்த துப்பாக்கியை அருகில் இருந்த வேலியின் பின்னால் வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி டான்ட் என்ற கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் குறித்த சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யும் காணொளி பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கறுப்பின வாலிபர் ஜோரஜ் ப்ளொய்ட் காவல்துறை அதிகாரி ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தால் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது