கொரோனாவைரஸ் பரவல் குறித்து வைரலாகும் அறிக்கை

இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக கூறும் அறிக்கை வைரலாகி வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டதாக கூறும் அறிக்கை வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மக்களை அச்சப்படுத்தும் தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. 

 

இந்த அறிக்கை வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அறிக்கை வைரலானதை தொடர்ந்து மத்திய அரசின் பிஐபி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

 

 

 கோப்புப்படம்

 

அதன்படி வைரலாகும் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை என பிஐபி தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் வைரலாகும் அறிக்கையை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் பிஐபி தெரிவித்துள்ளது.

 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.