குஜராத்தில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழப்பு

கொரோனா வைரஸ் இளம் வயதினரையும் விட்டு வைக்காது என்றும் இதனால் இளைஞர்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் வயதானவர்களை அதிகமாக தாக்கும் என்றும் இளம் வயதினரை தாக்காது என்றும் முதலில் கருத்து நிலவியது. ஆனால் கொரோனா வைரஸ் இளம் வயதினரையும் அதிக அளவு தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 


இதனால் அனைவரும் வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இன்று கொரோனா வைரசுக்கு பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. குஜராத் மாநிலம் தபி மாவட்டம் உச்ஹல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
 

அந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சூரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பிறந்த 14 நாட்களிலேயே உயிரிழந்தது.+

 

கொரோனா வைரஸ்

 

கொரோனா தொற்றால் அந்த குழந்தையின் உடலில் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்ததால் பரிதாபமாக இறந்தது. கொரோனாவுக்கு உயிர் இழந்த மிகவும் குறைந்த வயது குழந்தை இதுவாகும்.

அதே போல் சூரத்தில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரியில் பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தை ஒன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறது.

சிரங்சோலங்கி என்ற 26 வயது அரசு ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் இளம் வயதினரையும் விட்டு வைக்காது என்றும் இதனால் இளைஞர்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.