வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருவதால் என்ன நன்மைகள் உண்டு...?

தோல் நோய்கள் நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன.

இதற்கு
வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.

 

செரிமான கோளாறுகள் ஒரு மனிதனுக்கு செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருந்தாலே அவன் எந்த நோய்களும் அண்டாமல் நலமாக இருக்க முடியும். உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

 

நீரிழிவு கணையத்தில் இன்சுலின் என்கிற சுரப்பில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வெந்தயம் மற்றும் வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.

 

வயிற்று புண்கள் ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரிசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வயிற்று புண்களும் குணமாகும்.

 

தலைமுடி தலைமுடி உச்சந்தலையை வெளிப்புற சீதோஷணங்களிலிருந்து காக்கிறது. ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக
இருக்கிறது. நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசுந்தயிரில் கலந்து அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரத்திற்கு பின்பு தலைக்கு
ஊற்றிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும்.