உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியை கலைக்க முயன்ற ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயம்!

உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியை கலைக்க முயன்ற ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயம்!

மேற்கு லண்டனில் உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியை கலைக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில், ஏழு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

வைட் சிட்டியில் உள்ள பூங்காவொன்றில் ஏராளமானோர் கூடியிருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முயன்ற போது, குழுமியிருந்தவர்கள் செங்கற்கள் மற்றும் பிற பொருட்களை பொலிஸார் மீது வீசினர்.

எனினும், பொலிஸ் அதிகாரிகளுக்கு காயங்கள் எதுவும் உயிருக்கு ஆபத்தானவை என்று கூறப்படவில்லை.

ஆனால், ஏழு அதிகாரிகள் காயமடைந்தமை குறித்து, துணை உதவி ஆணையர் லாரன்ஸ் டெய்லர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த கூட்டங்கள் சட்டவிரோதமானது மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

அதிகாரிகள் மீது காட்டப்பட்ட வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நாங்கள் எந்த வடிவத்திலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதிகாரிகள் செங்கற்கள் மற்றும் பிற பொருட்கள் அவர்கள் மீது வீசப்பட்டுள்ளன.

எங்கள் சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது இடையூறு விளைவிக்கும் நோக்கத்தை நிறுத்துவோம் என்பதை இந்த முறியடிப்பு நிரூபித்தது’ என கூறினார்.

இப்பகுதியில் ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் section 60 உத்தரவும் நடைமுறையில் உள்ளது.