யாழ்ப்பாணத்தில் உருவான கொரோனா கொத்தணி தொடர்பில் சுதத் சமரவீர வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணத்தில் உருவான கொரோனா கொத்தணி தொடர்பில் சுதத் சமரவீர வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணத்தில் உருவான கொரோனா கொத்தணியால் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாகவும், நிலைமை இயல்பாகவும் உள்ளது என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பகுதியில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களிடம் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

"யாழ்ப்பாணம் பகுதியில் வைரஸ் பாதித்ததாகக் கண்டறியப்பட்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைச் சேர்ந்தவர்கள், எனவே, சமூகத்தில் வைரஸ் பரவக்கூடிய ஆபத்து இல்லை.

இருப்பினும், கொத்தணியிலிருந்து அதிக நோயாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று டாக்டர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தடுப்பூசி போட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாதிப்புகள் ஏற்படுவது குறித்து தொற்றுநோயியல் பிரிவுக்கு தெரிவிக்குமாறு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதன்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 6 பேருக்கு இரத்த உறைவு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எனினும் இதற்கு தடுப்பூசிகள் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.