33 வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு

33 வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்றிலிருந்து தமது வீரர்களை காப்பாற்றும் நோக்குடன் இம்முறை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப் போவதில்லை என வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த அறிவிப்பை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மார்ச் மாதம் 25ம் திகதி நடைபெற்ற ஒலிம்பிக் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக தாமதமான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறிய முதலாவது நாடாக வடகொரியா திகழ்கின்றது.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை, 2021ம் ஆண்டு ஜுலை மாதம் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1988ம் ஆண்டுக்கு பின்னர், வடகொரியா ஒலிம்பிக் போட்டியை தவிர்த்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.