ஐபிஎல் இல் பங்கேற்கும் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்

ஐபிஎல் இல் பங்கேற்கும் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்தினுள் வீரர்கள் இருப்பதால், தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என முன்னர் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருந்தது.

எனினும் தற்போது, இந்தியாவில் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், ஐ.பீ.எல். தொடரை தொற்றின் அச்சுறுத்தல் இன்றி நடாத்த வேண்டும் என்றால் அதில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி கொடுப்பது அவசியமாகவுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்