நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

ஜூன் 1 தொடக்கம் ஒகஸ்ட் 31 வரை மூன்று மாத காலத்திற்கு ஒருங்கிணைந்த நிதியிலிருந்து அரச செலவுகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த சுற்றறிக்கையொன்றை நிதியமைச்சின் ஊடாக, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகள் மற்றும் திணைக்களங்களின் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, மொத்த அரசாங்க செலவினம் ரூ .1043 பில்லியனாக இருப்பதோடு, அதில் ரூ .398.8 பில்லியன் மூலதனம் மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்தும் தொகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கு 107.26 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, சுகாதார அமைச்சகத்திற்கு ரூ .43.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.