ஐ.நாவின் அலுவலக வாகனத்தில் தகாதசெயல்: சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

ஐ.நாவின் அலுவலக வாகனத்தில் தகாதசெயல்: சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளி!

இஸ்ரேலில் ஐ.நாவின் அலுவலகப் பணிகளுக்காக இயங்கிவரும் காரில் பெண் ஒருவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு ஊழியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சி ஒன்று கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வைரலானது. யு.என் என எழுதப்பட்ட அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்பான விசாரணை முடியும் வரை அவர்களை கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது. இதேவேளை 2019 ஆம் ஆண்டு மட்டும் ஐ.நா ஊழியர்களுக்கு எதிராக 175 பாலியல் புகார்கள் இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.