கொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகின்றது!

கொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகின்றது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 9 ஆயிரத்து 859பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,718பேர் பாதிப்படைந்ததோடு, 176பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதற்மைய, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த இரண்டாவது நாடான ரஷ்யாவில் இதுவரை 6 இலட்சத்து 67 ஆயிரத்து 883பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 220,131பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 437,893பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.