அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 57,236பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 57,236பேர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 57,236பேர் பாதிப்படைந்ததோடு, 687பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவே அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும்.

இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 இலட்சத்து 37ஆயிரத்து 189பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன், 1 இலட்சத்து 31 ஆயிரத்து 485பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1,514,613பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15,907பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தமாக 1,191,091பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.