இன்றைய ராசி பலன்கள் 26/3/2021

இன்றைய ராசி பலன்கள் 26/3/2021

மேஷம்

விருப்பங்கள் நிறைவேறி வெற்றி காணும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்

நிம்மதி கூட நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் உண்டு. பயணத்தால் விரயம் உண்டு.

மிதுனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு

கடகம்

வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்

சிம்மம்

வருமானம் உயரும் நாள். நண்பர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு

கன்னி

வழக்குகளில் வெற்றி கிட்டும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வரவும், செலவும் சமமாகும். உடன் பிறப்புகளின் உதவி கிட்டும்

துலாம்

யோகமான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. புதியவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

விருச்சகம்

கனவுகள் நனவாகும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்

தனுசு

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோக உயர்வு உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகலாம்

மகரம்

கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை அதிகரிக்கும் நாள். உடனிருப்பவர்களால் தொல்லை உண்டு. மனக்குழப்பம் அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்

பிரியமானவர்களைச் சந்தித்து மகிழும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்

மீனம்

நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.