திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா

திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 11-ந்தேதி முதல் ஏழுமலையான் கோவிலுக்குள் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.