உலகின் முதல் ட்விட் 57.5 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை!

உலகின் முதல் ட்விட் 57.5 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை!

ட்விட்டர் நிறுவுனரும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெக் டொர்ஸேயினால் பதிவிடப்பட்டிருந்த உலகின் முதல் ட்விட் 2.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 57. 5 கோடி ரூபாய்) மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

'ஜெஸ்ட் செட்டிங் மை ட்விட்ர்' என்ற குறித்த ட்விட்டர் பதிவு 2006 மார்ச் 21 ஆம் திகதி பதிவிடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தின் மூலம் கிடைத்துள்ள பணத்தை ஆபிரிக்காவிலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கு டொர்ஸே வழங்கியுள்ளார்.

டிஜிட்டல் ஏல தளத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட இந்த ட்விட்டை மலேசியாவைச் சேர்ந்த ஸினா எஸ்டாவி என்பவர் வாங்கியுள்ளார். இதனை, மோனாலிஸா ஓவியத்தை வாங்குவதற்கு ஒப்பானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வெறும் ட்விட் அல்ல சில காலம் செல்லும் போது, மோனாலிஸா ஓவியத்தைப் போல இந்த ட்விட்டின் பெறுமதியை மக்கள் உணர்ந்து கொள்வர் என எஸ்டவி ட்விட்டர் பதிவொன்றை பதிவுசெய்துள்ளார்