இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 9,800 பேருக்கு கொரோனா தொற்று..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 9,800 பேருக்கு கொரோனா தொற்று..!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 9 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 9 ஆயிரத்து 851 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 273 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன இதற்கமைய இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 அதிகரித்துள்ளதோடு 6 ஆயிரத்து 348 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்றைய தினமே அதிகளவான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட பட்டியலில் இந்தியா 7 வது இடத்திலுள்ளது. இதேவேளை பிரேஷிலில் கொவிட்-19 காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 337 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுறுதியான மேலும் 28 ஆயிரத்து 882 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய பிரேஷிலில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளதோடு 33 ஆயிரத்து 884 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் பிரேஷிலிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் 67 இலட்சத்து 3 ஆயிரத்து 95 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அதேநேரம், இந்த வைரஸ் காரணமாக 3 இலட்சத்து 93 ஆயிரத்து 224 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும், உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றில் இருந்து 32 இலட்சத்து 52 ஆயிரத்து 378 பேர் குணமடைந்துள்ளனர்.