மலையக மக்கள் முன்னணியை தேர்தலின் பின் கைப்பற்றுவேன்! அனுசா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியை தேர்தலின் பின் கைப்பற்றுவேன்! அனுசா சந்திரசேகரன்

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை கைப்பற்றுவது உறுதி என்று அந்த கட்சியின் ஸ்தாபக தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வியும், சுயேட்சைக் குழுவில் கோடாரி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தில் நேற்று மாலை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மலையகத்தில் சுயேட்சையாக தனித்து போட்டியிட்ட எந்த கட்சியும் வெற்றி பெற்ற சரித்திரம் கிடையாது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்திருக்கின்ற கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

1994ஆம் ஆண்டில் முதற்தடவையாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றதை நினைவுப்படுத்த விரும்புவதாக அனுசா சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சட்டத்தரணிஅனுசா சந்திரசேகரன் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.