இன்றைய ராசி பலன்கள் 17/3/2021

இன்றைய ராசி பலன்கள் 17/3/2021

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பணியாற்றி டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சகஊழியர்களை குறைக் கூறி கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.


மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சபைகளில் முதல்மரியாதை கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ் கௌரவம் கூடும் நாள்.


கடகம்

கடகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.


சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.


கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். உங்கள் திறமையைச் சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டிய நாள்.


துலாம்

துலாம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.


தனுசு

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


கும்பம்

கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெரும் நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அழகும்இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில்  புது வாய்ப்புகள் தேடிவரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.