நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்தில்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்தில்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாத்தறை மாவட்டத்தில் நேற்று 49 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் மாத்தளை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தலா 34 பேருக்கு தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 28 பேருக்கு நேற்று தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றிலிருந்து நேற்றைய தினம் 321 பேர் குணமடைந்தனர்.

இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 737 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் முப்படையினரின் கீழ் முன்னெடுத்து செல்லப்படும் 105 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 ஆயிரத்து 411 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றைய 5 ஆயிரத்து 543 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது