குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, குமார் சங்கக்கார, வாக்குமூலம் வழங்குவதற்காக தற்போது குறித்த விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.