ஸ்ரீலங்காவில் ஸ்மார்ட் தொலைபேசியினால் மூளையில் நரம்பு வெடித்து உயிரிழப்பு!

ஸ்ரீலங்காவில் ஸ்மார்ட் தொலைபேசியினால் மூளையில் நரம்பு வெடித்து உயிரிழப்பு! திடீர் மரண விசாரணையாளர் எச்சரிக்கை

பிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டில் குழப்பமில்லாமல் வைத்திருக்க ஸ்மார்ட் கை தொலைபேசிகளை விளையாடுவதற்காக கொடுக்கின்றார்கள்.

அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உணர்த்தும் என கொழும்பு நகர திடீர் மரண விசாரணையாளர் மற்றும் சட்டத்தரணி இரேஷா தேசானி சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு 14 கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் வசித்த ஜெயராமன் சுரேந்திரன் என்னும் 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஸ்மார்ட் தொலைபேசியினால் அதிகமாக ஈர்க்கப்பட்டு மூளையில் நரம்பு வெடித்தன் காரணமாக இரத்த கசிவினால் மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கொழும்பு உதவி நீதிமன்ற வைத்தியர் மலிந்த த சில்வா மரண விசாரணையை நடத்தினார்.

அவ்வேளையில் சாட்சியமளித்த இறந்தவரின் மனைவியான ஆனந்தன் தர்சிகா (32) கூறியதாவது:

“எனது கணவர் எப்போதும் நீண்டநேரம் தனது கைத்தொலைபேசியில் கேம் விளையாடுவதாகவும் சம்பவம் அன்று (27) அதிகாலை 2.00 மணி வரை விளையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் குளியலறைக்கு சென்ற வேளையில் குளிக்கும் தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும்” கூறினார்.

சாட்சிகளையும் கருத்தில் கொண்ட மரண விசாரணையாளர் நீண்ட நேரம் கேம் விளையாடியதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் நரம்பொன்று வெடித்ததால் இம்மரணம் நிகழ்ந்ததாக இரேஷா தேசானி சமரவீர தெரிவித்தார்.