நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566

நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566

நாஸ்ட்ரோடமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566) இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம் மூலம் அழைக்கப்பட்ட நாஸ்ட்ரோடமஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நாஸ்ட்ரோடமஸ் நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 நாஸ்ட்ரோடமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566) இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம் மூலம் அழைக்கப்பட்ட நாஸ்ட்ரோடமஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நாஸ்ட்ரோடமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நாஸ்ட்ரோடமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார். இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர். நோஸ்ராடாமஸ் பிரான்ஸ் வடக்கில் செயின்ட் ரெமி டி பகுதியில் டிசம்பர் 14 1503, அன்று பிறந்தார் என்பதும் அவர் வாழ்ந்த பிரதேசப் பகுதி இன்றளவும் காணப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது. யூத வம்சாவளியினர்களான ரெய்னியெர் டி செயிண்ட் ரெமி மற்றும் நொடாரி ஜௌமெ டி நோஸ்ரடேம் தம்பதிகளுக்குப் பிறந்த எட்டுப்பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார் நாஸ்ட்ரோடமஸ். ஜௌமேயின் தந்தையான கசோனெட் 1455-ம் ஆண்டின் காலப் பகுதியில் தன்னை ஒரு கத்தோலிக்க மதத்தவராக தம்மை மாற்றிக்கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 1566-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி இறந்ததாகக் கூறப்படுகிறது.