மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான இரண்டாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி அமோக வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான இரண்டாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி அமோக வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது 20க்கு 20 போட்டியில் இலங்கை அணி, 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் கூலிட்ஜில் (Coolidge) இரவுநேர போட்டியாக இடம்பெற்ற இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை 3.30க்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஸ்க குணதிலக்க 56 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதனையடுத்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.4 ஓவர்களில், 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வித் தழுவியது